சமையல் குறிப்புகள்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பேரீச்சம் பழ கேக்

தேவையான பொருட்கள்

 • விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 20
 • மைதா – அரை கப்
 • பால் – அரை கப்
 • சர்க்கரை – தேவையான அளவு
 • சமையல் சோடா – கால் டீஸ்பூன்
 • எண்ணெய் – சிறிதளவு
 • வால்நெட் முந்திரி பருப்பு – தேவையான அளவு
 • வெண்ணெய் – சிறிதளவு

 


செய்முறை

 • பேரீச்சம் பழங்களை பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
 • பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
 • இந்த கலவையுடன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
 • அகன்ற பாத்திரத்தில் மைதாவையும் சமையல் சோடாவையும் கலந்து வைத்து கொள்ளவும்.
 • பின்னர் பேரீச்சம் பழ கலவையுடன் மைதா மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
 • இறுதியில் வால்நெட் முந்திரி பருப்புகளை தூவிக்கொள்ளவும். பின்னர் பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி கலவையை ஊற்றி பரப்பி மைக்ரோ ஓவனில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
 • சூப்பரான பேரீச்சம் பழ கேக் ரெடி.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker