சமையல் குறிப்புகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஃபார்சா

தேவையான பொருட்கள்

  • தோல் நீக்கிய எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்

மசாலா தயாரிக்க:

  • எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
  • பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
  • இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1 மேஜைக்கரண்டி
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு




கோட்டிங் செய்ய:

  • பிரெட் தூள் – 1/2 கப்
  • முட்டை – 2
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

செய்முறை

  • சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.
  • ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு போட்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
  • இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  • அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய சிக்கனை எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
  • பின் இதனை எண்ணெய் சூடானவுடன் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
  • சூப்பரான சிக்கன் ஃபார்சா ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker