சமையல் குறிப்புகள்

தக்காளி இளநீர் கிளியர் சூப்

தேவையான பொருட்கள்

 • தக்காளிச் சாறு – கால் கப்,
 • இளநீர் – 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),
 • இஞ்சிச் சாறு – ஒரு டீஸ்பூன்,
 • கொத்தமல்லி, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
 • உப்பு – சிறிதளவு.
 • நெய் – ஒரு டீஸ்பூன்,
 • பூண்டு – 2 பல் (விருப்பப்பட்டால்).
 • கடுகு – அரை டீஸ்பூன்,
 • பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
 • சீரகம் – அரை டீஸ்பூன்
 • வெந்தயம் – அரை டீஸ்பூன்
செய்முறை

 • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • பூண்டை நறுக்கிக்கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும்.
 • அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் இளநீர் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
 • கடைசியாக, அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள்.
 • சூப்பரான தக்காளி இளநீர் கிளியர் சூப் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker