குடும்பத்துக்குள்ளே நடக்கும் பாலியல் வன்முறை
பெண்கள் மற்றும் சிறுமிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்நாளில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஐ.நா சபையின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக அளவில் இறந்த பெண்களில் பாதிபேர் தங்கள் வாழ்க்கை துணை அல்லது குடும்பத்தினரால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அவர்களின் இயலாமையும் மரணத்திற்கு பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
அமெரிக்காவில்தான் அதிகமாக பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். முன்பெல்லாம் முன்பின் அறிமுகம் இல்லாத வெளி நபர்கள் மூலம்தான் பாலியல் வன்கொடுமைகள் நடந்தது.
ஆனால் வாழ்க்கை துணையும் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் அதிர்ச்சி தகவலும் ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 70 சதவீத பெண்கள் தங்கள் வாழ்க்கை துணை மூலம் உடல்ரீதியாகவும், பாலியல்ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்க நாடுகளில் 65 சதவீத பெண்கள் பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்கும் பாலியல் சீண்டல்கள் அவர்களின் துணை மூலமே அதிகமாக நடந்திருக்கிறது. தெற்கு ஆசியாவில் 40 சதவீதமும், கிழக்கு ஆசியாவில் 16 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களும், மேற்கு ஐரோப்பாவில் 19 சதவீத பெண்களும் துணை மூலமே பாலியல் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.