சமையல் குறிப்புகள்
பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :
- புளிக்காத தயிர் – 2 கப்,
- பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,
- முந்திரி – 8,
- மாதுளை முத்துக்கள் – கால் கப்,
- மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
- உப்பு – சிறிது
செய்முறை:
- தயிரை நன்கு வடிகட்டுங்கள்.
- முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.
- சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.
- சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.