சமையல் குறிப்புகள்
நாவில் கரைந்தோடும பாம்பே அல்வா
தேவையான பொருட்கள் :
- வெள்ளை சோள மாவு – 1 கப்
- சர்க்கரை – 2 கப்
- நெய் – 1/4 கப்
- முந்திரி, பாதாம் நறுக்கியது – 1 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு. – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
- கேசரி பவுடர் – 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
- பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.
- சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
- அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.
- அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
- அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான பாம்பே அல்வா ரெடி.