சமையல் குறிப்புகள்
ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
- கோதுமை பிரெட் துண்டுகள் – 6
- நெய் – சிறிதளவு
- தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
- கோஸ் – 100 கிராம்
- கேரட் – 100 கிராம்
- பன்னீர் துருவல் – 2 ஸ்பூன்
- வெண்ணெய் – சிறிதளவு
சட்னிக்கு…
- புதினா – ஒரு கைப்பிடி
- பூண்டு – 5 பல்
- பச்சை மிளகாய் – 1
செய்முறை :
- கோஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.
- கேரட், கோஸ், பன்னீர் துருவலுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சாஸ் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- சட்னிக்கான பொருட்களை, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
- பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியை தடவவும்.
- இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும்.
- தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிடவும்.
- சூப்பரான சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.