சமையல் குறிப்புகள்

சத்தான ஸ்நாக்ஸ் காளான் பஜ்ஜி

தேவையான பொருட்கள் :

  • பட்டன் காளான் – 15,
  • கடலை மாவு – அரை கப்,
  • கார்ன்ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்,
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
  • மைதா – 1 டேபிள் ஸ்பூன்,
  • சீரகத்தூள், மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்,
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கு.




செய்முறை :

  • காளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.
  • காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • சூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker