சமையல் குறிப்புகள்
சிங்கப்பூர் ஸ்டைல் மீன் தலைக் கறி
தேவையான பொருட்கள் :
- மீன் தலை – 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்ற வகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)
- வெண்டைக்காய் – கால் கிலோ
- கத்திரிக்காய் – கால் கிலோ
- நாட்டுத் தக்காளி் – கால் கிலோ
- சின்ன வெங்காயம் – கால் கிலோ
- புளி – 200 கிராம்
- மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்
- மல்லித் தூள் (தனியாத் தூள்) – 4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- எண்ணெய் – 2 குழிக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- வெல்லம் – சிறிதளவு
தாளிக்க:
- கடுகு – 2 டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 2,
- கறிவேப்பிலை- சிறிது
செய்முறை:
- வெண்டைக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு முழுதாக அப்படியே வைக்கவும்.
- கத்தரிக்காய், நாட்டுத்தக்காளியை இரண்டாக வெட்டிக்கெள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
- புளியை கரைத்து கொள்ளவும்.
- மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற விடவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டுக் கிளறவும்.
- புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம் தான் வேக வேண்டும்.
- சூப்பரான மீன் தலைக் கறி ரெடி.
- இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.