சமையல் குறிப்புகள்

சூப்பரான அஹனி பிரியாணி

தேவையான பொருள்கள் :

 • சிக்கன் – அரை கிலோ
 • பிரியாணி அரிசி – 1/2 கிலோ
 • பச்சைமிளகாய் – 15
 • கொத்தமல்லி தழை – 1 கட்டு
 • புதினா – 1/2 கட்டு
 • வெங்காயம் – 6
 • பிரியாணி இலை – 1
 • உப்பு தேவைக்குதாளிக்க :

 • நெய் – 50 கிராம்
 • தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
 • இஞ்சி பூண்டு – 3 டீஸ்பூன்
 • தயிர் – 3 டீஸ்பூன்
 • ஏலக்காய் – 4
 • பட்டை சிறிதளவு
 • கிராம்பு – 2
 • பிரியாணி இலை – 1
 • கொத்தமல்லி, புதினா – சிறிதளவுஅரைக்க தேவையான பொருள்கள் :
 • முந்திரி – 25 கிராம்
 • பாதம் – 25 கிராம்
 • பிஸ்தா – 10 கிராம்
 • கசகசா – 10

செய்முறை :

 • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
 • சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
 • பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைக்கவும்.
 • கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • வெங்காயம், தக்காளியை நீட்டமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.
 • சிக்கனுடன் 2 ஸ்பூன் த‌யிர், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க‌வும்.


 • அடி க‌னமான‌ பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த‌ பின்பு தாளிக்க‌ வேண்டிய‌ பொருட்க‌ளை போட்டு தாளித்த பின்னர்
  வெங்காய‌ம், ப‌.மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
 • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
 • ந‌ன்றாக‌ வ‌த‌ங்கிய‌ பிற‌கு கலந்து வைத்து சிக்கனை போட‌வும்.இத‌னுட‌ன் அரைத்த‌ ந‌ட்ஸ் விழுது, உப்பு சேர்த்து ந‌ன்றாக‌ மூடிப்போட்டு 1/2 மணிநேரம் சிக்கனை வேக‌விட‌வும்.
 • பிறகு அதில் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும். மேலே கடைசியாக எலுமிச்சை பழத்தினை சுற்றிவரை பிழிந்துவிடவும்.
 • பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகனமான பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த 15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.
 • பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும்.
 • அஹனி பிரியாணி ரெடி.

குறிப்பு :

 • குறைந்த தணலில் அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது.
 • பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால் பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker