சமையல் குறிப்புகள்

சூப்பரான சிக்கன் முர்தபா

தேவையான பொருட்கள் :

  • கோதுமை – 3 கப்
  • சிக்கன் – 200 கிராம்
  • பட்டாணி – 100 கிராம்
  • வெங்காயம் – கால் கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
  • முட்டை – 8
  • கோஸ் – 100 கிராம்
  • கேரட் – 50 கிராம்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி இலை – 1 கொத்து
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  • கோஸ், கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் எண்ணெய், உப்பு, தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிரைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை 30 மணிநேரம் ஊற வைத்த பிறகு சப்பாத்திகளாக சுட்டு வைக்கவும்.
  • கடாயில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கிய பிறகு கொத்தமல்லி இலை, துருவிய தேங்காயை போட்டு தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு இறக்கவும்.
  • அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
  • பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு, முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
  • ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
  • பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக சுட்டு எடுக்கவும்.
  • சூப்பரான சிக்கன் முர்தபா ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker