சமையல் குறிப்புகள்

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்

தேவையான பொருட்கள் :

  • இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
  • உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.



செய்முறை:

  • பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.
  • அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.
  • வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.
  • சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker