வாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்
• எல்லா மனிதர்களும் அதிக காமவெறி கொண்டவர்கள் அல்ல.
• எல்லா ஆண்களுமே ஒரு உறவு முறியும் பொழுது மனதினுள்ளாவது அழவே செய்கின்றனர்.
• எல்லா பெண்களுமே பொதுவாக ஆண்கள் கூறுவது போல் பணத்திற்காக ஒரு ஆணை திருமணம் செய்வதில்லை.
• ஆண்களுக்கும் பெண்களால் அதிக உதை, அடி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவது உண்டு.
• ஆண்கள் எப்போதுமே தவறானவர்கள் அல்ல.
• தோற்றத்தினை விட வங்கி இருப்பே இன்றைய ஆணுக்கு மிக அவசியமாகின்றது.
• எல்லா காதல் கல்யாணங்களும் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்பதில்லை.
• எல்லா விவகாரத்துகளுக்கும் ஆண்கள் மட்டுமே காரணமல்ல.
• எல்லா காணும் வயது பழக்க உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை.
• சில நண்பர்கள் நிரந்தரமாய் வாழ்வில் இருப்பதில்லை.
• பணம் மட்டுமே எல்லாமாகவும் இன்று மாறி இருக்கின்றது. இதனை தவறு என்று உணரும் காலத்தில் மனிதனின் 90 சதவீத வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
• எல்லா சண்டைகளும் சமரசத்தில் முடிவது இல்லை.
• இறப்பு எந்நேரமும் யாருக்கும் வரலாம்.
• யாரும் அடுத்தவருக்காக இறப்பதில்லை.
• கடந்த காலம் திரும்ப வராது.
• இன்றைய காலமும், நேரமும், நிகழ்வும் கடந்தே போகும்.
• அனைவரின் வாழ்வும் ஒரு நாள் முடிந்தே தீரும்.
இத்தகு கருத்துகளை மேகுல் என்ற ஒருவர் உண்மை விளம்பி என்ற கூற்றோடு எழுதியவைகளை படித்தேன். படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்று கடினமாக இருந்தாலும் இதுபோன்ற கருத்துகளை இன்றைய சமுதாயம் படிக்க வேண்டும். அவர்கள் மனதில் ஆழ பதிய வேண்டும். அப்படி பதிந்தால் முன் கோபம், வேகம், படபடப்பு, கடுமையான சொற்கள், போட்டி, பொறாமை என எதுவுமே இருக்காது. இதன் விளைவாக அவருக்கு மன உளைச்சலே இராது.
இன்றைய மருத்துவம் அறிவுறுத்தவதே ‘அதிக நோய் பாதிப்புகளின் மூல காரணம் மன உளைச்சல்தான். ஆகவே இதனை அடியோடு நீக்க வேண்டும் வாழ்வின் யதார்த்தத்தினை புரிந்து கொண்டால் மன உளைச்சலும் இருக்காது. நோயும் இருக்காது. ஆரோக்கியமான, மகிழ்வான வாழ்வு அனைவருக்கும் கிட்டும். மருத்துவம் என்பது உடல் நலம் + மன நலம் கொண்டதே ஆகும். வருமுன் தவிர்ப்பதும் மருத்துவ உலகின் கடமை. இதனை மக்கள் நன்கு படித்து பயன்பெற வேண்டும் என்பதே மருத்துவ உலகின் ஆசையாகும்.