சமையல் குறிப்புகள்
குழந்தைக்கு விருப்பமான முட்டை சீஸ் மஃபின்
தேவையான பொருட்கள்
- முட்டை – 6
- ஷ்ரெட்டடு சீஸ்(Shredded cheese) – 6 தேக்கரண்டி
- வெங்காயம் – 1
- உப்பு, மிளகு – தேவையான அளவு
- குடை மிளகாய் – 1
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
- வெங்காயம், குடை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- முதலில் மைக்ரோவேவ் அவனை 180 – 200C’ல் முற்சூடு செய்யவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்கயம், குடைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- இப்பொழுது 6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவிய பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவேண்டும்.
- முற்சூடு செய்த அவனில் வைத்து 15 – 20 நிமிடம் பேக் செய்யவும்.
- சுவையான முட்டை சீஸ் மஃபின் தயார்.