சமையல் குறிப்புகள்
கவுனி அரிசி அதிரசம்
தேவையான பொருட்கள் :
- கவுனி அரிசி – ஒரு கிலோ
- பாகு வெல்லம் – அரை கிலோ
- சர்க்கரை – ஒரு ஸ்பூன்
- ஏலக்காய் – 4
- தேவையான எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
- கவுனி அரிசியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
- பின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் வரை ஆறவிட வேண்டும். அரிசியை மாவாக திரிக்க வேண்டும்.
- பாகு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாகு வெல்லத்தை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வெல்லத்தை எடுக்க வேண்டும்.
- அதன்பின் கவுனி அரிசி மாவில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வடிவில் கவுனி அரிசி மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி அதிரசம் தயார்.