காட்டன் புடவைகளுக்கான பிளவுஸ் டிசைன்கள்
எளிமையாகவும் அதே நேரம் ராயலாகவும் இருக்கும் காட்டன் புடவைக்கு நிகர் எதுவுமில்லை. 100 ரூபாயிலிருந்தே பட்ஜெட்டிற்கு ஏற்ப கிடைக்கும் இந்த காட்டன் புடவைகள் தலைமை பதவி வகிக்கும் பெண்கள் தொடங்கி வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கின்றன. அத்தகைய காட்டன் புடவைக்களுக்குத் தான் இன்று எண்ணற்ற தனித்துவமான பிளவுஸ் டிசைன்கள் வந்துவிட்டன. அவற்றில் என்னென்ன டிரெண்டில் இருக்கிறது எனவும் அதற்கு ஏற்ப எவ்வாறு ஸ்டைலிங் செய்து கொள்ளலாம் என்பதையும் காணலாம்.
பிளவுஸ் டிசைன்கள் கலம்காரி டிசைன், விலங்குகள், ப்ளாக் பிரிண்ட்ஸ், பெரிய டிசைன்கள் கொண்ட மோட்டிவ்ஸ் என இதுபோன்ற டிசைன்களைத்தான் அணிகின்றனர். அதிலேயே வித்யாசமான நெக் டிசைன்கள் கொண்டு அசத்தலாக மேட்ச் செய்கின்றனர். காட்டன் புடவைக்கு எம்பராய்டரி டிசைனைத் தவிருங்கள்.
இப்போது காட்டன் புடவைகளுக்கு போட் நெக் டிசைன் அதிகமாக விரும்பப்படுகிறது. குறிப்பாக கலம்காரி ஃபீவர் வந்ததிலிருந்தே ஃபோட் நெக் டிசைனும் இலவச இணைப்பாக டிரெண்டாகிவிட்டது. எனவே கலம்காரி புடவை, பிளெயின் காட்டன் புடவை என எதுவாக இருந்தாலும் அதற்குக் காண்ட்ராஸ்ட் நிறங்களைத் தேர்வு செய்து அதற்கு போட் நெக் வைத்துத் தையுங்கள். அதிலேயே பின்புற டிசைனிற்கு ஓவல் ஷேப் ஓப்பன் வைத்து பட்டன் வைத்தால் நன்றாக இருக்கும். இந்த நெக் டைப்பிற்கு முழங்கை அளவு அல்லது மணிக்கட்டு வரை நீளமாக ஸ்லீவ் வைத்தால் தோற்றத்தை வித்தியாசமாக காட்டும்.
கழுத்தை ஒட்டிய சைனீஸ் காலர் வைத்துத் தைப்பதும் நன்றாக இருக்கும். இந்த கட் ஒர்க்குக்கு ஏற்ப பின்புறம் ஸிப் வைத்துத் தைப்பதும் புதுவரவு. கோடைக் காலத்தில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்தான் கைக் கொடுக்கும். இதிலேயே டிசைன்கள் இல்லாத காட்டன் ஃபேப்ரிக்காக தேர்வு செய்ய வேண்டும். அதில் ஸ்ட்ராப் பட்டையாக வைத்து பின்புறம் பெரிய வட்டமான நெக் டிசைன் வைத்து அணிந்தால் அழகாக இருக்கும். அதில் சுங்கு வைத்தால் மேலும் அழகூட்டும்.
காட்டன் புடவைக்கு வெல்வெட் பிளவுஸ் அணிவது தனித்துவமாக இருக்கும். டிசைன்கள் இல்லாமல் அணியுங்கள். புடவைக்கு பக்காவான காண்ட்ராஸ்டாக இருக்கும். பிளவுசின் பின்புற டிசைன் எண்ணற்ற கணக்கில் வந்துவிட்டன. இருப்பினும் காட்டன் புடவைக்கு ஏற்ப எளிமையாக இருக்க வேண்டும். அதில் கிராஸ் லைன் கொண்ட கட்டங்கள் , நடுப் பகுதியில் மட்டும் வட்டம், பெரிய ஓப்பன் வைத்து அடிப்பகுதியில் சிறிய அளவு ஸ்ட்ராப், பின் புறம் ஓப்பனே இல்லாமல் வைப்பது, வலது புறத்தில் மட்டும் பட்டன் டிசைன் வைப்பது என அதன் டிசைன் வகைகள் நீண்டு கொண்டே போகும். அதில் உங்கள் புடவைக்கு ஏற்ப பொருத்தமானதை தேர்வு செய்யுங்கள்.