சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு சீஸ் சமோசா
தேவையான பொருட்கள் :
- பச்சை மிளகாய் – 4
- கொத்தமல்லி – 1/2 கப்
- உருளைக் கிழங்கு – 250 கிராம்
- சீஸ் – 1 1/2 கப்
- உப்பு – தேவையான அளவு
- வெண்ணெய் – 1/4 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
மாவு பிசைய :
- மைதா – 2 கப்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
- உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.
- கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சீஸை துருவிக்கொள்ளவும்.
- உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உறித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.
- அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.
- திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.
- அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.
- இப்படி ஒவ்வொரு மாவாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசா அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.
- சுவையான உருளைக்கிழங்கு சீஸ் சமோசா தயார்.