ஆரோக்கியம்
அருமையான வெந்தயக்கீரை கார குழம்பு
தேவையான பொருட்கள் :
- வெந்தயக் கீரை – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 20
- பூண்டு – 10 பல்
- புளி – தேவையான அளவு
- சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லி தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- வெல்லம் – ஒரு சிறிய துண்டு
செய்முறை :
- வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.
- பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
- மேலே நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.
- சூப்பரான வெந்தயக்கீரை கார குழம்பு ரெடி.