சமையல் குறிப்புகள்

சூப்பரான காடை முட்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

 • காடை முட்டை – 20
 • எண்ணெய் – தேவையான அளவு
 • சீரகம் – 1 தேக்கரண்டி
 • வெங்காயம் – 1
 • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
 • இஞ்சி-பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
 • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
 • தக்காளி – 2
 • பச்சை மிளகாய் – 2
 • உப்பு – தேவையான அளவு
 • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
 • மல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி
 • கரம்மசாலா தூள் – 1 மேஜைக்கரண்டி
 • நீர் – தேவையான அளவு
 • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
 • காடை முட்டை
செய்முறை :

 • தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
 • வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
 • அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்
 • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்
 • மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்
 • அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
 • குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
 • காடை முட்டை குழம்பு ரெடி!!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker