எடிட்டர் சாய்ஸ்

மனித உடலும் அதிசயம்தான்..

உடலின் மெல்லிய சருமம் கண் இமை. ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம். மனிதனின் கண் நிமிடத்திற்கு 25 முறை மூடித்திறக்கிறது. நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ., மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2½ லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30 ஆயிரம் கிலோ. நம் உடல் எடையில் 9 சதவீதம் ரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவீதம் நீர்தான். நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.



நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம், பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது. நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்க போதுமானது. நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவீதமும், யூரியா 2 சதவீதமும், கழிவுப்பொருட்கள் 2 சதவீதமும் உள்ளன.

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கிறோம். முழுவளார்ச்சி அடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் 94 எலும்புகள் குறைகின்றன. நமக்கு நாள்தோறும் சுவாசிக்க 16 கிலோ காற்று தேவைப்படுகிறது.

உடலின் மிகப்பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. நமது உடலில் உள்ள ஈரல் 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் ஆகும். மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.



மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 30 கோடி. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம். தும்மலின் போது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம், சுமார் 150 கிலோ மீட்டர் வேகம் ஆகும். இன்னும் என்னனெ்னவோ விந்தைகள் நம் உடலிலேயே இருக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker