கூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
1. சீயக்காயைக் கொண்டு தலைமுடியை பராமரித்தால் கூந்தல் ஆரோக்கியமாக, மென்மெய்யாக, அழகாக மற்றும் அடர்த்தியாக இருக்கும்.
2. சீயக்காயில் விட்டமின் எ, விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகியன உள்ளன. இவைகள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. சீயக்காயில் ph -ன் அளவு குறைவாக இருப்பதால்தலையின் ஈரப்பதத்தை தக்க வைத்து முடியை பொழிவாக வைத்துக் கொள்கிறது.
4. சீயக்காயைக் கொண்டு முடியை பராமரித்தால் பொடு தொல்லை நீங்கும்.
5. சீயக்காயை ஷாம்பு செய்து பயன்படுத்தினால் நரைமுடி ஏற்படாது.
6. தலைமுடி உதிர்வை சீயக்காய் கட்டுப்படுத்துகிறது. முடியை வலிமையாக வைத்துக் கொள்ள சீயக்காய் உதவுகிறது.
7. பேன்கள் தொல்லை நீங்கும்.