சமையல் குறிப்புகள்
சத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்
தேவையான பொருட்கள்
- கேரட் – 1,
- பழுத்த பெங்களூர் தக்காளி – 3,
- பெரிய வெங்காயம் – 1/2 அளவு,
- கொத்தமல்லித்தழை – சிறிது,
- தண்ணீர் – 400 மி.லி.,
- உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கு,
- கிராம்பு – 2,
- பூண்டு – 2 பல்,
- பட்டை – 1/2 இன்ச் அளவு.
செய்முறை
- தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.
- சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.
- குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.
- சூப்பரான கேரட் தக்காளி சூப் ரெடி.
குறிப்பு:
சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.