ஆரோக்கியம்
இரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா?
இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்பதால் எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்குண்டு. ஆகையால் பசி அதிகமாக எடுக்கும்போது இதை சாப்பிடலாம் ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், சில பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும்.
இந்த நூடுல்ஸில் இருக்கும் கொழுப்பு, நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலின் எடையை எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம் இது தவிர இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் இருப்பதால் அஜீரண கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவேதான் இரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடக்கூடாது இதனை தவிர்த்து ஆரோக்கியமான வேறு நல்ல உணவு வகைகள் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலின் எடையும் கூடாது, உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.