சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் மட்டன் மசாலா

தேவையான பொருட்கள் :

  • மட்டன் – முக்கால் கிலோ
  • முருங்கைக்காய் – 2
  • பெரிய வெங்காயம் – 100 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • முழு மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்
  • கசகசா – ஒரு டீஸ்பூன்
  • மிளகு – ஒரு டீஸ்பூன்
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • முருங்கைக்காயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
  • காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.
  • அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
  • மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
  • முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி.

 


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker