சமையல் குறிப்புகள்
கார்ன் காலிஃப்ளவர் சூப்
தேவையான பொருட்கள் :
- காலிஃப்ளவர் – ஒரு கப்,
- ஸ்வீட் கார்ன் – ஒரு கப்,
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்,
- சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
- வெண்ணெய் – கால் டீஸ்பூன்,
- கொத்தமல்லி – சிறிதளவு,
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- அடுத்து அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விடவும்.
- பிறகு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
- சூப் திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
- சூப்பரான கார்ன் காலிஃப்ளவர் சூப் ரெடி.