சமையல் குறிப்புகள்

கார்ன் காலிஃப்ளவர் சூப்

தேவையான பொருட்கள் :

 • காலிஃப்ளவர் – ஒரு கப்,
 • ஸ்வீட் கார்ன் – ஒரு கப்,
 • தக்காளி – 1
 • வெங்காயம் – 1
 • மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்,
 • சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
 • வெண்ணெய் – கால் டீஸ்பூன்,
 • கொத்தமல்லி – சிறிதளவு,
 • உப்பு – தேவையான அளவு.

 


செய்முறை:

 • காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
 • காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ளவும்.
 • கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
 • அடுத்து அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விடவும்.
 • பிறகு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
 • சூப் திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
 • சூப்பரான கார்ன் காலிஃப்ளவர் சூப் ரெடி.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker