ஃபேஷன்

மங்கையர் மனம் கவரும் மெட்டிகள்…

திருமணமான பெண்கள் கட்டாயம் அணியக்கூடிய அணிகலன்களில் ஒன்று மெட்டியாகும். இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் திருமணமான பெண்களால் மெட்டியானது அணியப்படுகிறது.

அதிலும் குறிப்பாக இந்து சமயப் பெண்களுக்கு திருமண நாளில் மணமகனால் அணிவிக்கப்படும் ஒரு மங்கல அணிகலன் இது என்று சொல்லலாம்.

மெட்டியானது காலின் இரண்டாவது விரலில் அணியப்படுகின்றது. கால்களில் மெட்டி அணிவதற்கு சில மருத்துவக் காரணங்களும் சொல்லப்படுகிறது.இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளில் பல்வேறு வகைகள் உள்ளன.

சாதாரண மெட்டி:- இவை மேற்புறம் பெரும்பாலும் எந்தவித டிசைனும் இல்லாமல் இருக்கும். இவற்றை ஒவ்வொரு இரண்டாவது விரலிலும் இரண்டு இரண்டாக அணிவார்கள்.

இன்னும் சில நெளி நெளியாக இருக்கும். சில மெட்டிகள் பட்டையாக அவற்றில் கீற்று போல டிசைன்கள் இருக்கும். சாதாரண மெட்டிகள் தினப்படி அணிந்து கொள்ள ஏற்றவாறு சாதாரணமாக இருக்கும்.

வேவ் டிசைன் மெட்டிகள்:- கடல் அலையை போன்ற தோற்றத்தை தங்கத்தில் வடிவமைக்கிறார்கள். இவ்வகை மெட்டியானது சுடிதார், மேற்கத்திய ஆடைகள் மற்றும் சேலைகள் என அனைத்து வகை ஆடைகளோடும் அணிந்து கொள்ள ஏற்றவை. இந்த அலை போன்ற வடிவமானது வலிமை, அன்பு, சக்தி போன்றவற்றை குறிப்பதாக கூறப்படுகின்றது. இதுபோன்ற டிசைன்கள் வெள்ளியிலும் கிடைக்கின்றன.

வெள்ளி மெட்டியில் டயமண்ட் கற்கள்:- இவ்வகை மெட்டிகள் விரித்து விரல்களுக்கு பொருத்தமாக அட்ஜஸ்ட் செய்து அணிந்து கொள்வது போல் இருக்கும். ஸ்டெர்லிங் சில்வரில் பிரகாசமான வைரக் கற்களை பதித்து மிகவும் அற்புதமாக, சிறப்பாகவும் உள்ள இவை விழாக்களுக்கு அணிந்து கொள்வதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இவை அட்ஜஸ்ட் வகையாக இருப்பதால் எந்த விரலிலும் அணிந்து கொள்ளலாம்.

ரத்தினக்கற்கள் பதித்த மெட்டிகள்:- நம் விருப்பத்திற்கேற்ப ரத்தின கற்களை சிறிய அல்லது பெரியதாக பதித்து அழகிய வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருக்கும். இவ்வகை மெட்டிகளை திருமணமான பெண்கள் அணிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

அடர்ந்த பச்சை, ரூபி, டர்கோயிஸ், கெம்ப் போன்றவற்றை வெள்ளி மெட்டியில் பெரிய ஒரே கற்களாக பதித்து செய்யப்படுபவை பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது. பிளாட்டினத்திலும் ஜெம் ஸ்டோன்களை பதித்து செய்யப்படும் மெட்டிகள் இப்பொழுது பிரபலமாக உள்ளன.

மெட்டி

சூரியகாந்தி மெட்டிகள்:- சூரியகாந்தி பூவானது தங்கத்தில் செய்யப்பட்டு வெள்ளி வளையத்தின் மேல் இணைக்கப்பட்டிருக்கும் இவ்வகை மெட்டியானது அணிபவர்களுக்கு லாயல்டி, அடோரெஷன் மற்றும் உயிர்ச்சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.

ட்ரிபில் வெள்ளி மெட்டி:- காலின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது விரல்களில் சேர்ந்ததாற் போல் அணியப்பட்டு மூன்று மெட்டிகளும் வெள்ளி செயினால் இணைக்கப்பட்டு அவற்றுடன் சலங்கைகளும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலிருக்கும் பலவிதமான வடிவங்களில் பல வண்ண எனாமல் வண்ணங்கள் பூசப்பட்டு பார்ப்பதற்கே மிகவும் வண்ண மயமாக உள்ளன.

கொலுசு மெட்டி:- கால்களிலிருக்கும் கொலுசிலிருந்து செயினானது நீண்டு சென்று அதன் முனையில் மெட்டியானது இணைக்கப்பட்டு அணிந்து கொள்வது போல் வந்திருப்பவை கொலுசு மெட்டியாகும். இவை தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றில் அழகிய டிசைன்களுடன் அழகிய வண்ணக்கற்கள் பதித்து செய்யப்படுகின்றன. பூப்போன்ற டிசைன்களில் பலவிதமான கற்கள் பதித்து செய்யப்படும் இவை அன்பு, மகிழ்ச்சி மற்றும் மரியாதையை குறிக்கின்றது.ராஜஸ்தானி மெட்டிகள்:- இவை பெரும்பாலும் பெரிய அளவுகளிலேயே இருக்கும். மெட்டியின் மேற்புறம் நடுவில் பச்சை, சிவப்பு அல்லது ஏதாவது ஒரு கல்லானது வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டு இரண்டு ரூபாய் நாணயத்தை போன்று பெரிய வடிவில் இருக்கும்.

இவை மட்டுமல்லாமல் முத்துகளை கோர்த்து செய்யப்பட்டிருக்கும் முத்து மெட்டிகளை மூன்று வளையங்களாக ஒரே விரலில் போடுகிறார்கள். சிறிய முத்துக்களை கோர்த்த வளையமானது நடுவிலும் அதைவிடப் பெரிய முத்துக்களை கோர்த்த வளையமானது இரண்டு ஓரங்களிலும் அணிந்து கொள்வது இப்போது டிரெண்டியாக உள்ளது.

குழந்தை பாதங்கள், இன்பினிட்டி டிசைன், ஆமை, பூக்கள், டிசைனர் மெட்டிகள் என்று எத்தனையோ டிசைன்கள் மெட்டிகளில் உள்ளன.

கால்களின் அனைத்து விரல்களிலுமே வேறு வேறு டிசைன்களிலான மெட்டிகளை அணிந்து கொள்வதும் இப்பொழுது பிரபலமாகி விருகிறது.

கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. அந்த விரலில் மெட்டியை அணிந்து நடக்கும்போது ஏற்படும் அழுத்தமானது கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக நம்பப்படுகிறது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker