புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருமா?
பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள் ஆரோக்கியத்திற்கும் கொடுத்து முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாக்கும் வரை அவர்களுக்குத் தொல்லைத் தந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்கள்தாக்கிக் கொண்டே தான் இருக்கும்.
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். இருந்தாலும் பல பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும் வரை அதைப் பற்றிக் கடுகளவும் தெரிவதில்லை. ஈஸ்ட்ரோஜென் என்னும் பெண்களுக்கான ஹார்மோன் அவர்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாயைப் போலவே புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்த கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்தப் பாதுகாப்பை முறித்து இருதய நோயை ஏற்படுத்துகின்றன.
சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாகக் கண்டுகொள்கிறார்கள், ஏனெனில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை.
அவர்களுக்குக் காய்ச்சல் வந்தது போல மிகவும் சோர்வாகவோ அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல்/வாந்தி அல்லது முதுகு, கை, தாடை ஆகிய ஒன்றில் வலி வரலாம். இதன் விளைவாகச் சிலருக்கு மாரடைப்புக்குப் பின்னர் வாழ்நாளை அதிகரிக்கும் பீடா பிளாக்கர்ஸ், ACE இஹிபிடர்ஸ், ஆஸ்பிரின் போன்ற உயிர் காப்பான்கள் கிடைக்கின்றது. 38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள் ஆண்களில் 25% பேர் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள்.