சமையல் குறிப்புகள்

டயட்டில் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு

தேவையான பொருட்கள் :

  • ஓட்ஸ் – 1 கப்
  • தயிர் – 1 கப்
  • கேரட் – 1 பெரியது
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – 1 சிறுதுண்டு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை :

  • ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  • பிறகு துருவிய கேரட்டை போட்டு வதக்கவும்.
  • அடுத்து அதில் தயிர், சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker