சமையல் குறிப்புகள்
தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள் :
- தயிர் – ஒரு கப்
- பூண்டு – ஒன்று
- இஞ்சி – ஒரு துண்டு
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை – சிறிது
- பச்சைமிளகாய் – 2
- லவங்கம் – 4
- எலுமிச்சை – பாதி
- மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா – அரை தேக்கரண்டி
- மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
- சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
- கஸ்தூரி மேத்தி – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
- அரிசி – அரை கிலோ (ஊறவைக்கவும்)
- சிக்கன் லெக்பீஸ் – 8
- வெங்காயம் – 3
- தக்காளி – 3
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
- புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ – தலா 2
செய்முறை
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- சிக்கனை சுத்தம் செய்த பின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
- சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை முக்கால் பதம் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.
- பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அடுத்து புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றில் கலந்து எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.
- அடுத்து அதில் பொரித்த சிக்கனை போட்டு 15 நிமிடம் தம்மில் போடவேண்டும்.
- அரைமணி நேரம் கழித்து பாத்திரத்தை திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி ரெடி.