சமையல் குறிப்புகள்

சத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

  • முட்டைகள் – 2
  • கோதுமை பிரெட் துண்டுகள் – 2
  • மிளகு தூள் – ½ தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • பால் – சிறிதளவு
  • வெண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி – சிறிதளவு




செய்முறை :

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெயை போட்டு சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும்.
  • முட்டை கலவை கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைத்து பரிமாறவும்.
  • சுவையான முட்டை சாண்ட்விச் தயார்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker