தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை சிறிய வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது தவறு

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற்கும் அசறுவதாக இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.



பல பள்ளிகள் இரண்டரை வயது குழந்தைகளை கூட பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிவிட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல. நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
உளவியல் மருத்துவர்கள் உளவியல் மருத்துவர்கள் சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சில குழந்தைகள் தங்களது ஏழு வயதிலும் சிலர், பதினொரு வயதிலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்களாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker