தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி?

16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையின் பெருக்கம் வயிற்றை அழுத்துவதால், இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும், மஞ்சள் காமாலை  இருக்கிறதா என்பதையும் இந்த நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும்.




இதைத் தவிர்க்க பிரச்னைக்கு காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே சரியானது. அதே நேரம், பிற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடும்போது நிமிர்ந்து உட்காருவது உங்கள் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றும்.இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் கடுமையான, எரிவது போன்ற வலி மார்பில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக் குழாய்க்கு வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. 50 சதவிதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம்.




அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்து படுப்பதாலேயே அவ்வப்போது நெஞ்செரிச்சல் வருகிறது. எனவே, ஒரேயடியாக சாப்பிடாமல் சின்னச்சின்ன இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிட்டு, பிரச்னை வராமல் தவிர்க்கலாம். இரவில் நெஞ்செரிச்சல் வந்து சிலருக்கு விழிப்பு வரும். அப்படி வருபவர்கள் தங்கள் பக்கத்தில் தயாராக ஒரு டம்ளர் பாலை வைத்துக் கொள்வது நல்லது.  நெஞ்செரிச்சலுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். இவையெல்லாம்  பாதுகாப்பற்றவை.




சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் சிரமமின்றி செல்லும். தலைப்பகுதி உயரமாக உள்ள படுக்கையில் படுத்தால் நல்ல உறக்கம் வரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker