உறவுகள்புதியவை

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..? அப்போ இதையெல்லாம் செய்யுங்க..!

திருமண உறவை பாதுகாக்கவும், வளர்க்கவும் ஆண் – பெண் இருவரின் முயற்சி அவசியம். தினசரி வேலை, குழந்தைகள் மற்றும் பிற கடமைகளுக்கு இடையில், சில நேரங்களில் உங்கள் இருவரின் கூட்டாண்மையை பராமரிக்க இயலாது என்று தோன்றலாம். பிரச்சினைகள் ஏற்படும் போது, சில தம்பதிகள் விவாகரத்து செய்வது மற்றும் அவர்களுக்கான தனி வழிகளில் செல்வது ஆரோக்கியமானது என்று பலர் நினைக்கின்றனர். உறவில் சிக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான். உங்கள் இருவரின் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது முதல் அன்றாட வாழ்க்கையில் அதிக காதல் செலுத்துவது வரை, உங்கள் கூட்டாண்மையை மேம்படுத்த பின்வரும் வழிகள் நிச்சயம் உதவும்.

ஒன்றாக தூங்க செல்லுங்கள் :

உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை இருவரும் ஒன்றாகக் கழிப்பதால், இருவரும் தினசரி வேலைகளை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள். சிக்கல்கள் ஏற்படாது என்று ஆணித்தரமாக கூற முடியாது. இருப்பினும், உங்களையும் உங்கள் மனைவியின் தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்வது உங்கள் திருமண வாழ்வை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யலாம், மேலும் நீங்கள் இணைந்திருப்பதை உணர உதவும். உங்கள் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, விவாகரத்து ஒரு விருப்பமல்ல என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் திருமணத்திற்கு வெளியே வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பதை விட, உங்கள் கூட்டாண்மை வலுவாக இருப்பதில் கவனம் செலுத்துவது அர்ப்பணிப்பை உருவாக்குவது. இவை அனைத்திற்குமான ஒரே வழி நீங்கள் இருவரும் ஒன்றாக தூங்கச்செல்வது தான்.

உங்கள் அன்பை கொடுங்கள் :

திருமணமான சில நாட்கள் கழித்து உங்கள் இருவரின் உண்மை மனநிலை நன்றாக வெளிப்படும். திருமணத்திற்கு முன்பு நீங்கள் எப்படி நேசித்தீர்களோ அதேபோல் உங்கள் கூட்டாளரை நேசியுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் கூட்டாளரை கட்டி அணைக்கலாம் அல்லது முத்தமிடலாம். அவர்களுக்கு பிடித்தவற்றை செய்து அவர்களை மகிழ்வுடன் வைத்திருப்பதற்கான வழிகளை நீங்கள் தேடலாம். அன்பை கொடுக்கும் நேரத்தில் தேவையற்ற சிக்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு உடல் ரீதியான நெருக்கத்தை காட்டலாம். உங்களது அரவணைப்பு அவர்களுக்கு தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் :

உறவுகளில் மகிழ்ச்சி மட்டுமே நிரந்தரமாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. நிச்சயம் உறவுகளில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம். மேலும் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான தீர்வை நோக்கி நீங்கள் நகர வேண்டுமே தவிர பிரச்சனைகளிலேயே ஆழ்ந்து இருந்தீர்கள் என்றால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். உங்கள் கூட்டாளாரிடம் சிறு சந்தேகம் இருந்தாலும் கூட அதை உடனே கேட்டு விடுவது முக்கியம். சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு இருந்தால் அது நாள்பட மேலும் அதிகரித்து உங்களை சிக்கலில் தள்ளி விடும். ஆகவே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் இருவரும் வெளியில் காற்று ஓட்டமாக ஒன்றாக நடந்து சென்று உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை அவர்களிடத்தில் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள். புதிய காற்றை சுவாசிக்க இருவரும் ஒரே திசையில் நடப்பதன் மூலம் சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.

மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள் :

மன்னிப்பு என்பது ஒன்றும் தீய வார்த்தை அல்ல. தவறு உங்கள் மீது இருந்தால் கூச்சப்படாமல் மன்னிப்பு கேளுங்கள் அல்லது உங்கள் கூட்டாளர் உங்களிடம் மன்னிப்பு கேட்டால் தயங்காமலும் தாமதிக்காமலும் மன்னித்து விடுங்கள். நீங்கள் இருவரும் நீண்டநாள் ஒற்றுமையாக வாழ இந்த சிறு சிறு விஷயங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். மன்னிப்பு வெறும் வார்த்தையில் மட்டும் அல்லாது வேறு விதங்களிலும் நீங்கள் மன்னிப்பு கேட்கலாம். உங்கள் கூட்டாளருக்கு பிடித்த பொருட்களை வாங்கி தருவதன் மூலமும் நீங்கள் மன்னிப்பு கேட்க முடியும். சிக்கலின் வீரியத்தைப் பொறுத்து அதற்கான பொருளை தயார் செய்யுங்கள்.

உங்கள் கூட்டாளரை மதிக்கவும் :

நம்மில் பலர் செய்யும் பெரிய தவறு நம் கூட்டாளரை மதிப்புடன் நடத்தாமல் இருப்பது தான். பெரும்பாலான நேரங்களில் ஆண் பெண்ணை உதாசீனப்படுத்துவது, மரியாதை குறைவாக நடத்துவது போன்றவை நடக்கும் இதுபோன்ற செயல்கள் சிக்கலை மென்மேலும் வலுப்படுத்தும் அல்லது வேறொரு நாளில் சிக்கல் பெரிதாக மாற வாய்ப்பும் உள்ளது. உங்கள் கூட்டாளர், உங்களை விட படிப்பில், செல்வத்தில், திறமையில், கலையில் மேலும் பல செயல்களில் குறைவானவராக இருந்தாலும் கூட அவர் உங்கள் வாழ்க்கைத்துணை என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அவருக்கு உரிய மரியாதையை அளித்திடுங்கள். நீங்கள் அவர்களுக்கான மரியாதையை அளிக்கவில்லை என்றால் உங்கள் சுற்றத்தில் உள்ளவர்கள் யாரும் அவர்களுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தலாம் :

பல நேரங்களில் நாம் ஒன்றாக அமர்ந்து உணவை பகிர்ந்து சாப்பிட்டால் பல சிக்கல்கள் தீர்ந்துவிடும். உங்கள் துணை உங்களை எப்போதும் நேசிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் துணையுடன் அடிக்கடி உணவு அருந்துங்கள். உணவு அருந்தும் போது அதில் ஆரோக்கியமானவற்றை, உங்கள் துணைக்குப் பிடித்தவற்றை அதில் சேர்த்து உணவைப் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் நிச்சயம் அது சிக்கல்களுக்கான தீர்வுகளை அளிக்கும். அதோடு கூட பல நேரங்களில் உணவு அருந்தும் போது உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள்.

திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். அந்த சொல்லுக்கு ஏற்ப உங்கள் திருமண வாழ்வு உங்களுடன் முடிவடையாது உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கான அஸ்திவாரமாக தான் அது இருக்கும். பொதுவாக திருமணம், தலைமுறைகளை உருவாக்கும் அதில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். அதில் சிக்கல் ஏற்படாமல் உங்கள் துணையிடம் இருக்கும் சந்தேகங்களை உடனடி தீர்த்துக்கொண்டு உங்கள் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker