ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்தினால் என்ன பலன்கள் தெரியுமா….?

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.
வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும்  காரணம் ஆகும்.




நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம்  மறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.




வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும்  பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர  பல்வலி, ஈறுவலி குறையும்.




வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். படை, தேமல் மேல் வெங்காயச்  சாற்றை தடவ மறைந்துவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker