உங்களை மட்டுமே உலகமாகப் பார்க்கும் காதலரை அல்லது காதலியை ஒரு பொருட்டாக மதித்திருக்கோமா என்று ஒரு சில நிமிடம் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் மதித்திருக்கிறோம் என்ற பதில் வரவே வராது. அந்த மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளும் ஆழமாக பாதிக்கப்படிருக்கும் என சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
4 பேர் மத்தியில் உங்கள் காதலர் உங்களை மட்டுப்படுத்தி பேசியிருந்தும் கூட அதே அளவு காதலில் அவரிடம் நடந்து கொண்டும் அவர் உங்களை கண்டுக் கொள்ள மாட்டேன் என்கிறாரா? அவருக்கு பிடித்த மாதிரி இருந்தும் அவர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்க கூட மாட்டேங்கிறார் என்ற ஏக்கத்திலிருந்து விடுபட உங்களை ஒரு பொருட்டாக மதிக்காத காதலரை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிமுறைகள் 5 பகுதியாக பகுக்கப்பட்டுள்ளன.
அமைதியாக பேசுங்கள்:
காதல் உறவாக இருந்தாலும் சரி, தம்பதியினராக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசும் போது எட்டப்படுகிற தீர்வு எப்போதும் சரியானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். உங்களுடைய உணர்வுகளையும் வருத்தங்களையும் அவர்களிடம் பொறுமையாக எடுத்துரையுங்கள். சண்டையிடுவது தனது நோக்கமல்ல என்பதை புரிய வையுங்கள். நீங்கள் பேசி முடிக்கும் வரை இடையில் பேச வேண்டாம் எனக் கோரிக்கையை முன்வையுங்கள். இது உங்கள் இருவருக்குமான வாக்குவாதத்தை தடுக்கும்.
நான் தான் காரணம் உங்கள் இணையரை குற்றஞ்ச்சாட்டாமல் நான் தான் அந்தப் பிரச்சினைக்கு காரணம் என ஆரம்பியுங்கள். இது மேலும் உங்களை அந்த விசயத்தை மிக நீளமாக உங்கள் இணையருடன் விவாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
உறுதியாக இருங்கள்:
ஒரு விஷயத்துக்காக உங்களுக்குள் சண்டை மூளுகிறதென்றால் அது வெரும் உரையாடல் அல்ல என்பதை புரிய வையுங்கள். அது ஒரு பிரச்சினையின் பகுதி எனத் தெளிவாக உணர்த்துங்கள்.ஒரே இரவில் பேசி முடிக்க முடியாத விசயங்களாக கூட இருக்கலாம். உங்கள் இணையர் அப்போது தான் உங்களுடைய உணர்வுகளைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கலாம் எனவே உறுதியாக இருங்கள்.
எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள்:
நீங்கள் உங்கள் இணையரிடம் இருந்து எதிர்பார்க்கும் குறைந்தபட்ச விசயங்களை அவர்களிடம் தெரிவியுங்கள். ஏனெனில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கூட உங்கள் இணையருக்கு தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை அவர் மாற நினைத்தால் நிச்சயம் உங்கள் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்வார்.
மாற்றத்திற்காக காத்திருங்கள்:
உங்களின் ஆசைகளையும், தேவைகளையும் உங்கள் இணையரிடம் தெரிவித்து விட்டீர்கள்.இது இந்நேரம் அவரது மண்டையில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். அவர் மாறுவதற்கான முயற்சியில் கட்டாயம் ஈடுபடுவார். அவருக்கான வாய்ப்பை வழங்குங்கள். நிச்சயம் அவர் உங்களை மதிக்கும் ஒருவராக கட்டாயம் திரும்பி வருவார்.
உங்களை மதிக்காத காதலனை எப்படி நடத்தக் கூடாது:
அவர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதற்காக புறக்கணிகாதீர்கள்.
நீங்கள் செய்யாத தவறுக்காக ஒரு போதும் மன்னிப்பு கோராதீர்கள்.
அவருக்கு எதிராக குரலை உயர்த்துகிறேன் என்ற பெயரில் அதிகமாக சப்தமிடாதீர்கள்.