அழகு..அழகு..புதியவை

மேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை… இதுமட்டும் இருந்தா போதும் வீட்டிலேயே இதை செய்யலாம்

உடலைப் பேணிக்காப்பது என்பது எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு விசயமாகும். இதற்காகவே மெனக்கெட்டுக் கொண்டு லோசன்கள், அழகு சாதனப் பொருட்கள் என நமது வருமானத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட பட்ஜெட்டை ஒதுக்கி வைத்து விடுவது வழக்கமாக இருக்கிறது. மேனிக்யூர், பெடிக்யூர் போன்ற பாத பராமரிப்புகளை பியூட்டி பார்லர் சென்று தான் செய்ய வேண்டும் என எந்த நிர்பந்தமும் இல்லை. இன்றைய சூழலில் அதற்கான சாதனங்கள் நீங்கள் ஒவ்வொரு முறையும் பியூட்டி பார்லர் போகத் தேவை இல்லை. அதற்குத் தேவையான முக்கியமான கருவிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நைல் கட்டர்/ நகம் வெட்டி:

நைல் கட்டர் அல்லது நகம் வெட்டி தான் மேனிக்யூர், பேடிக்யூர் செய்வதற்குத் தேவையான மிக அடிப்படையான கருவியாகும். ஏனெனில் உங்கள் நகங்களில் தான் பாக்டீரியாக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்யகிறது. மேலும் அவை உங்கள் உடலின் மிக மோசமான அழுக்குகளை சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால் கட்டாயம் நைல் கட்டர்/ நகம் வெட்டி கொண்டு அவ்வப்போது நகங்களை ஓழுங்கமைப்பது மிகவும் முக்கியம். மேலும் நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதால் நகங்களை எப்போது சுத்தமாக வைத்திருப்பது நல்லது. நகங்களை வெட்டுமுன் நைல் கட்டர் சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கட்டாயம் உறுதி செய்த பின்னரே வெட்ட வேண்டும். அதே சமயத்தில் வளர்ந்த நகங்களை வெட்டும் போது சென்சிட்டிவ் தோல் பகுதியில் படாமல் கவனமாக வெட்ட வேண்டும் இல்லையேல் நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.க்யூட்டிகல் புஷர்

ஒரு க்யூட்டிக்கல் புஷர் நகத்தைப் பராமரிப்பதற்கான மிக எளிமையான கருவி. இது விரல் அல்லது கால் நகத்தின் அடிப்பகுதியிலுள்ள இறந்த தோல்களை, நகங்களில் இருந்து முன்னும் பின்னும் தள்ள உதவுகிறது. இதனால் இறந்த தோல்களை நீக்குவதன் மூலம் உங்கள் கால் கை நகங்கள் வலுவாக வளர உதவும். நகங்களின் அடிப்பகுதியில் உள்ள தோல் கடினமான சருமமாக இருந்தால் ஸ்டீலிலான க்யூட்டிகல் புஷர் கருவியை பயன்படுத்த வேண்டும். அதே சமயத்தில் மென்மையான சருமமாக இருந்தால் மரத்திலாலான க்யூட்டிக்கல் புஷரை பயன்படுத்த வேண்டும்.

க்யூட்டிகல் நிப்பர்

க்யூட்டிக்கல் நிப்பர் விரல் மற்றும் கால் விரல்களைச் சுற்றியுள்ள தேவையற்ற (தொங்கக்கூடிய) நகங்கள், கடினமான இறந்த தோல்கள் (க்யூட்டிகல்) மற்றும் உலர்ந்த சருமத்தை சரிச் செய்யப் பயன்படும் ஒரு கருவியாகும். இதுபோன்ற இறுக்கமான இடங்களில் நுழைவதற்கும் , எரிச்சலூட்டும் உள் நகங்களை ஒழுங்கமைப்பதற்கும் இது மிகச் சிறந்த துல்லியமான ஒரு அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இது நகங்களைச் சுற்றியுள்ள தேவையற்ற மென்மையான திசுக்களையும் அகற்ற உதவுகிறது. மேலும் விரல் மற்றும் கால் விரல்களின் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டும் நில்லாமல் நகங்கள் தொடர்பான நோய்களிலிருந்தும் தொற்று நோய்களிலிருந்தும் தடுக்க இது பயன்படுகிறது.நகங்களை பாலிஸ் செய்யும் சாதனம்:

நைல் பஃவர் இயற்கையான பளப்பான நகங்களை எவ்வாறு அடைவது என எப்போதாவது யோசித்திருக்கிறோமா? குறிப்பாக பெண்களுக்கு அந்த ஆசை நிச்சயம் இருந்திருக்கும். உங்கள் நகங்களில் உள்ள மந்தமான நிறத்தில் இருந்து விடுபட விரும்பினால் உங்கள் நகங்களுக்கு பிரகாசமான பொலிவை வழங்க பஃப் நிப்பரை பயன்படுத்தி நகங்களுக்கு பாலிஸ் போட்ட அனுபவத்தைப் பெறுங்கள். நகங்களை உலர்ந்த முகடுகளை அல்லது நகத்திலிருந்து உதிர்ந்த பகுதிகளை பஃவர் நிப்பரைக் கொண்டு மென்மையாக்குவதன் மூலம் அகற்ற முடிகிறது. இந்தக் கருவியின் முக்கிய நோக்கம் உங்கள் நகங்களை மெருகூட்டுவதும், அவர்களுக்கு சீரான தோற்றத்தைக் கொடுப்பதும் ஆகும் .

நகக் கோப்பு / நைல் ஃபைல்

நைல் ஃபைல் என்பது கரடுமுரடான உலோகத்தின் ஒரு துண்டு அல்லது விரல் நகங்கள் மற்றும் கால் விரல் நகங்களை மென்மையாக்குவதற்கும் வடிவமைப்பதற்கும் பயன்படும் ஒரு எமரிபோர்டு ஆகும். இந்தக் கருவி நகங்களின் விளிம்புகளை மென்மையாக அரைத்து நகங்களின் விளிம்புகளை வடிவமைப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது. சந்தையில் பல்வேறு வகையான நகக் கோப்புகள் உள்ளன. மேலும் எமரிபோர்டு மற்றும் உலோகக் கோப்புகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் எமரிபோர்டு மிகவும் மென்மையாக இருப்பதால் அவற்றை பயன்படுத்துவது நல்லது. மாறாக கடுமையான நகங்களுக்கு உலோகக் கோப்புகளை பயன்படுத்தலாம்.பியூமிஸ் கல் / படிகக்கல்

உங்கள் கால்களின் அடிப்பகுதிகள் பொதுவாகக் காணப்படும் இறந்த சரும செல்கள் மற்றும் கால்சஸின் வெளிப்புற அடுக்கை அகற்ற பியூமிஸ் கல் பயன்படுத்தப்படுகிறது. இதைச் செய்வது காலில் விரிசல் அடைந்த சருமத்திலிருந்தும் விடுபட உதவுகிறது.

நைல் பிரஸ்/ நகத் தூரிகை:

நகங்களை முழுமையாக சுத்தம் செய்ய நைல் பிரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. நகங்களிலிருந்து பிடிவாதமான கறைகள் அல்லது அழுக்குகளை அகற்றவும் நைல் பிரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் நகங்கள் முடிந்தவரை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

கால் விரல் பிரிப்பான்/ டோ செப்பரேட்டர்:

காலிலிருந்து கால் விரல்களை தனியாக பிரிப்பதற்காக இது பயன்படுகிறது. மேலும் நீங்கள் நெயில் பாலிஸ் போடுவதற்கு முன் இதை கால் விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு போட்டால் பிற இடங்களில் கறைபடாது. மேலும் இந்த அற்புதமான கருவி மூட்டுக்களை மாற்றியமைக்கவும், சுழற்சியை மேம்படுத்தி கால் வலியை போக்கவும், வளைந்த கால்விரல்களை நேராக்கவும் இது உதவுகிறது.ஆரஞ்வுட் குச்சி:

நகங்களின் அடிப்பகுதியுலுள்ள இறந்த செல்களை உள்நோக்கி நகர்ததவும், அழுக்குகளை நீக்கவும், நைல் பாலிஸ் பிழைகளை சரிசெய்யவும் இந்தக் குச்சி பயன்படுத்தப்படுகிறது.

லேசான ஸ்கரெப்

மென்மையான சருமங்களைக் கொண்டிருப்பவர்கள் லேசான ஸ்க்ரப் செய்வது ரிலாக்சிங் செய்வதற்காக மட்டுமல்லாமல் தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள இறந்தச் செல்களை நீக்குவதற்கும் பயன்படுகிறது. இது இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் மெதுவாக கைகளால் மென்மையாக ஸ்க்ரப் செய்வது முழுமையான பலன்களை அளிக்கும்.பெடிக்லியர் – உங்கள் கால்களுக்கான விரைவான திருத்தம் ஒரு கருவியின் உதவியுடன் நீங்கள் அழகிய கால்களை அடைய விரும்பினால், பெடிக்லியரை தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மினரல் மேற்பரப்பு ரோலர் பாதங்களுடன் தொடர்புகொண்டு விரிசல், கால்சியஸ், மற்றும் கடினமான தோலை நீக்குகிறது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவலாகும். மேலும் இது நீர்ப்புகா மற்றும் ஈரமான தோலிலும் நன்றாக வேலை செய்கிறது.கால்சஸ் ரிமூவர்:

ஒரு கால்சஸ் ரிமூவர் அல்லது ஃபுட் ஸ்கிராப்பர் உங்கள் குதிகாலில் இருந்து இறந்த, உலர்ந்த மற்றும் கரடுமுரடான தோலை மென்மையாக அகற்ற இது உதவுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker