சமையல் குறிப்புகள்

வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா

தேவையான பொருட்கள் :

  • வாழைக்காய் – 2,
  • தோசை அல்லது இட்லி மாவு – 2 கப்,
  • பச்சை மிளகாய் – 2,
  • எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு,
  • பச்சைப் பட்டாணி – கால் கப்,
  • இஞ்சி – சிறிய துண்டு,
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.




செய்முறை:

  • வாழைக்காயை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
  • பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
  • ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும்.
  • பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்!
  • இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker