ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்மருத்துவம்

பொடுகு பிரச்சினையில் இருந்து தலைமுடியைக் காப்பாற்ற அருமையான சித்த மருத்துவ முறை!

தற்போது ஆண், பெண் இருபாலாருக்கும் தலைமுடியை பாதுகாப்பதற்கும் பெரும் சிரமப்படுகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதிக ஆண்களுக்கும் பொடுகு தொல்லையால் தங்களின் முடிகளை இழக்க நேரிடும்.

சிலருக்கு பரம்பரை, சீரற்ற உணவு முறை, முறையாக முடியை பராமரிக்காமை போன்ற காரணங்களால் அதிக பொடுகும், முடி உதிர்வும் ஏற்படுகிறது.

விளம்பரங்களில் வரும் நடிகை, நடிகர்களைப் போல நாமும் விதம் விதமான சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வீட்டில் பயன்படுத்த தொடங்கினால் அதுவும் பலனளிக்கவில்லை.

இதற்காக நீங்கள் வீட்டிலே சிறந்த சித்த வைத்தியம் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்  பொடுகு பிரச்சினை இல்லாமல் போகும்.  

பொடுகு பிரச்சினைக்கு தீர்வு

வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக வற்றும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரைக்கொண்டு வாரம் ஒரு முறை தலை முடியை அலசி வந்தால் பொடுகு மற்றும் தலையில் இருக்கும் அழுக்கு எல்லாம் வெளியேறி, தலை சுத்தமாக இருக்கும்.

கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகைச் சம அளவு எடுத்துக்கொண்டு, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அரைத்து மிதமான சூடுகொண்ட பசும்பாலில் கலந்து, தலையில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின்னர், சிகைக்காய் போட்டுத் தலைக்குக் குளித்தால் பொடுக்குத் தொல்லை போய் உடலில் இருக்கும் வெப்பமும் தனியும்.

கசகசா, தேங்காய், பாதாம் பருப்பு, குறைந்த அளவில் சீரகம், மிளகு ஆகியவற்றை இரவு, தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, பாலில் கலந்து தலைக்குத் தடவினால் முடி வறட்சி நீங்கி பொடுகுத் தொல்லை ஒழியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker