ஆரோக்கியம்

பெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா?

உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.



புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker