சமையல் குறிப்புகள்
சப்பாத்திக்கு சூப்பரான வெஜிடபிள் குருமா
தேவையான பொருட்கள் :
- கேரட் – 2
- பீன்ஸ் – 15,
- பட்டாணி – கால் கப்,
- உருளைக்கிழங்கு – 2
- பெரிய வெங்காயம் – 2,
- தக்காளி – 3,
- தேங்காய்த் துருவல் – 1 கப்,
- பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
- பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
- இஞ்சி – 1 துண்டு,
- பூண்டு – 5 பல்,
- சோம்பு – அரை டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் – 5.
செய்முறை :
- கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.
- தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.
- அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
- தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.
- அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.