யாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை?
37 – 40 வாரங்களில் தாய்க்கு வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது ஆபத்து, சிக்கல்கள் இருந்தால் மட்டும், மிக விரைவில் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
குழந்தையின் எடை 4 கிலோவுக்கும் அதிகமாக இருப்பது கர்ப்பப்பையில் நீர் குறைவாக இருப்பது தாய்க்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தால் சிசேரியன் செய்யவேண்டும் கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால், இது தாயின் உடல்நிலையை பொறுத்துதான். சிலருக்கு சுகபிரசவம்கூட நடக்கலாம்.
இரட்டை குழந்தைகள் இருப்பது கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருப்பது பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் நிலை மாறுபட்டு இருப்பது முந்தைய பிரசவம் சிசேரியனாக இருப்பது. தாய்க்கு இதய நோய் பாதிப்பு, நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது வலி வந்த பின்னும் கர்ப்பப்பை வாய் திறக்காமல் இருப்பது 30 வயதை கடந்தவர்கள்… இது சிலருக்கு மட்டுமே… இதெல்லாம் காரணங்களாகும்.
வலி காரணமாக, பயம், பதற்றம், மனப்பிரச்னை காரணமாகத் தாய்மார்களே மருத்துவரிடம் கேட்டு சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சிலர் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், ஜாதகம் பார்த்து செய்வது, தங்களுடைய சொந்த விருப்பத்தில் சில நாளை குறிப்பிட்டு குழந்தையை பெற்றுக்கொள்ள சிசேரியன் செய்வது போன்றவையும் நடக்கின்றன.
ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறக்க கூடாது என்ற மூடநம்பிக்கையிலும் சிசேரியன் செய்து கொள்கின்றனர். பிரசவ வலிக்கு ரொம்பவே பயப்பட்டும் இப்படி சிசேரியன் செய்து கொள்கின்றனர். மேற்சொன்ன காரணங்களும் சிலருக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இருக்கும். எனினும் அவர்களே தானாக முன்வந்தும் சிசேரியன் செய்துகொள்பவர்களும் உண்டு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
சிசேரியனால் தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருந்தால், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால், பிரசவம் சிக்கலாகும். குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்த பின் சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படலாம் வயிற்றினுள் ரத்த ஓட்டத்தில் பிரச்னை வந்து, அதனால் மலக்குடலில் பிரச்னை ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்படுவது. இது சிலருக்கு மட்டுமே. தொற்றுநோய்கள் வரலாம். சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகு வலி அதிகமாக இருக்கும். அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.