சமையல் குறிப்புகள்

ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

  • உதிராக வடித்த சாதம் – 2 கப்,
  • பெரிய வெங்காயம் – 2,
  • தக்காளி – 6,
  • பச்சை மிளகாய் – 3,
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா – சிறிதளவு,
  • கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கு.




பொடிக்க (முதல் வகை) :

  • பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2,
  • கசகசா 2 – டீஸ்பூன்,
  • முந்திரி – 6,
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்.

மற்றொரு வகை பொடிக்கு:

  • தனியா, துவரம் பருப்பு தலா – 2 டீஸ்பூன்,
  • மிளகாய் வற்றல் – 4,
  • கொப்பரை தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,
  • எண்ணெய் 1 டீஸ்பூன்.




செய்முறை:

  • பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
  • வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.
  • இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.
  • சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker