தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்கள்
யோகா செய்வதால் உடலுறவில் சிறப்பாக ஈடுபட முடிவதோடு, தாம்பத்திய வாழ்க்கை இன்னும் அற்புதமாக அமையும். செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைக்கும் யோகாசனங்களைப் பார்க்கலாம்.
பூர்ணா டிடாலி ஆசனம் (Poorna Titali Asana) இந்த ஆசனம் பட்டாம்பூச்சியின் நிலை போன்று இருக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக உட்கார்ந்து, படத்தில் காட்டியவாறு இரண்டு பாதங்களும் ஒன்றோடு ஒன்று தொடும் நிலையில், கைகளால் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால், தொடைகள் நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகி, இடுப்பு பகுதி நன்கு விரிவடைந்து, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.
ஹனுமனாசனா (Hanumanasana) இந்த ஆசனமானது, படத்தில் காட்டியவாறு 180 டிகிரி அளவு கால்களை விரிக்க வேண்டும். பின் கைகளை மேலே தூக்கி, மெதுவாக கால்களை தொட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தினால் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தம், டென்சன் போன்றவை குறைந்து, செக்ஸ் வாழ்க்கையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
மலையேறும் நிலை (Mountain Climber Pose) இந்த ஆசனத்திற்கு தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊற்றி, மேலே எழுந்து, இடது காலை முன்புறமாக தூக்கி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போல் வலது புறம் செய்ய வேண்டும். இந்த யோகாசனத்தின் மூலம் இடுப்பு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, இடுப்பு எலும்புகள் வலிமையடைந்து, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் ஸ்ட்ரெட்ச் ஆகி, படுக்கையில் நன்கு செயல்பட உதவும்.
புஜங்காசனம் (Bhujangasana) இந்த ஆசனம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஆசனத்தின் போது, தரையில் குப்புற படுத்து, உள்ளங்கைகளை தரையில் ஊற்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு உடலை மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்பும் போது மூச்சை வெளிவிட வேண்டும். இதேப்போன்று 10 முறை தினமும் செய்து வந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுறவில் ஈடுபடும் போது சிறப்பாக செயல்பட முடியும்.
கர்ணபிதாசனா (Karnapidasana) இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். ஆனால் இன்த ஆரசத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.