சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் ‘அந்த’ பிரச்சனைகள்
சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட, சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம், தவிர, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே விரைப்புத் தன்மை குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆண்மைக்குறைவு ஏற்படுவதைத் தவிர்க்கவும். குறைபாடு அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வது முதல் வேலை. இதற்கு பரிசோதனை முதல் சிகிச்சை வரை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடான வாழ்க்கை; ஊட்டமுள்ள – அதேவேளையில் சர்க்கரையை மிகைப்படுத்தாத உணவு முறை, உடற்பயிற்சிகள், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதல் ஆகியவை மிக முக்கியம்.
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது இரத்த இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்ளுங்கள். இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடாமலும், இயல்பான அளவைவிட அதிகமாகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இரத்த சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இலக்காக வைத்து அதற்கேற்ற வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதோடு, ஆண்மைக்குறைவு ஏற்படாமலும் தடுக்கிறது.