சமையல் குறிப்புகள்

பிரெட் உருளைக்கிழங்கு வடை

தேவையான பொருட்கள் :

  • உருளைக் கிழங்கு – 2
  • பிரெட் துண்டுகள் – 10
  • வறுத்த ரவை – அரை கப்
  • அரிசி மாவு – இரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கு
  • கேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது




செய்முறை :

  • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.
  • இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
  • கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
  • சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.
  • விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker