சமையல் குறிப்புகள்
சத்தான டிபன் வெஜிடபிள் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – இரண்டு கப்,
- கேரட் – 1,
- கோஸ் – சிறிய துண்டு,
- வெங்காயம் – 1,
- துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் – 2,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
- கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- சத்தான சுவையான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.