காட்டன் சேலைகள் பராமரிப்பு முறைகள்
பட்டுச் சேலைகளுக்கு அடுத்த படியாக பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுபவை காட்டன் சேலைகள்தான். காட்டன் சேலைகளில் எத்தனையோ விதமான காட்டன் சேலைகள் உள்ளன. அதிலும் ப்யூர் காட்டன் சேலைகளைப் பராமரிப்பது என்பது சற்று சிரமமாக இருந்தாலும் சரியான பராமரிப்பு இருந்தால் இது போன்ற காட்டன் சேலைகளை என்றும் புதியதாக வாங்கிய சேலைகளைப் போல வைத்துக் கொள்ள முடியும்.
காட்டன் சேலைகளைக் கட்டும் போது வெகு சீக்கிரத்திலேயே அச்சேலைகளில் சுருக்கங்கள் வந்து விடுகின்றன. ஸின்தடிக் சேலைகளை எவ்வளவு நேரம் கட்டியிருந்தாலும் இது போன்ற சுருக்கங்கள் வருவதில்லை. தூய பருத்திச் சேலைகள் மிகவும் மிருதுவாக மென்மைத் தன்மையுடன் இருப்பதே இதற்குக் காரணம். காட்டன் சேலைகளை அணிந்து கொள்ள வயது வரம்போ, உடல் கட்டோ அல்லது தோலின் நிறமோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்துப் பெண்களின் துணி அலமாரியில் தனக்கென்று சிறப்பான இடத்தை பிடித்து வைத்திருப்பவை காட்டன் சேலைகள் என்றால் அது மிகையாகாது.
பராமரிப்பு முறைகள்:
* விலையுயர்ந்த காட்டன் சேலைகளை ஒவ்வொரு முறையும் வெளியில் அணிந்து சென்று வந்தவுடன் துவைக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைக் கொடியில் காற்றாட உலரவிட்டு பின்பு அயர்ன் செய்து மடித்து வைக்கலாம்.
* புதிய காட்டன் சேலைகளை முதல்முறை துவைப்பதற்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்கு முன்னால் ராக் சால்ட் கலந்த வெது வெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் சேலையில் இருக்கும் அதிகப்படியான கஞ்சி மொடமொடப்பு மற்றும் அதிகப்படியான கலரானது முதல் துவைப்பிலேயே சேலையை விட்டு நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும் பொழுது சேலையிலிருந்து கலர் செல்வது என்பது அதிக அளவில் தடுக்கப்படுகின்றது.
* மிருதுவான சோப்பு மற்றும் சோப்புத்தூள் கொண்டு காட்டன் சேலைகளைத் துவைக்க வேண்டும். அதே போல் கார்ட்ன் சேலைகளைப் பலம் கொண்டு மட்டும் அடித்துத் துவைப்பதோ முருக்கிப் பிழிவதோ கூடாது. நீரில் சேலையை அலசிய பிறகு சேலையில் இருக்கும் நீர் வடிவதற்கு வாட்டர் டேப் அல்லது துணி உலர்த்தும் கொடியில் தொங்கவிட்டு நீர் முற்றிலும் வடிந்த பிறகு சேலையை காய வைக்க வேண்டும்.
காட்டன் சேலைகள் பராமரிப்பு முறைகள்
* சேலையில் உள்ள நீர் வடிந்த பிறகு வடித்த கஞ்சி அல்லது ஸ்டார்ச் பெளடர் கலந்த நீரில் சேலையை நனைத்துப் பிழியாமல் காய வைக்க வேண்டும்.
* மேலும் சூரிய வெயில் படாதவாறு நிழலில் சேலையை உலர்த்துவது மிகவும் முக்கியமாகும். சூரிய ஒளி நேரடியாக படும் பொழுது சேலையின் நிறமானது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
* காட்டன் சேலையானது நன்கு உலர்ந்த பிறகு சரியாக மடித்து பெட்டின் அடியில் வைக்கலாம். அல்லது அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். காட்டன் சேலைகளை அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். சேலைகளை அயர்ன் செய்யும் பொழுது மிதமான வெப்பத்தில் மெதுவாக அயர்ன் செய்ய வேண்டும்.
* இரண்டு, மூன்று காட்டன் சேலைகளை ஒன்றாக துவைக்கக் கூடாது. ஒன்றாக துவைக்கும் பொழுது ஒரு சேலையில் இருக்கும் கலரானது மற்றொரு சேலையில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் தனித்தனியாகச் சேலைகளைத் துவைப்பதே சிறந்தது.
* காட்டன் சேலைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது என்றால் மென்மையான துணிகளை துவைக்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்து துவைப்பது நல்லது. கைகளில் துவைப்பது மிகச்சிறந்த வழிஎன்றே சொல்லலாம்.
* காட்டன் சேலைகளில் கறைகள் ஏதாவது இருந்தால் அவற்றை ப்ரஷ் போட்டு கடினமாகத் துவைப்பதிற்கு பதிலாக வொய்ட் பெட்ரோல் கொண்டு கறைகளை நீக்கலாம் அல்லது டிரைகிளனர்களிடம் கொடுத்து கறைகளை நீக்கலாம்.
* கஞ்சி போட்டு அயர்ன் செய்த காட்டன் சேலைகளை மடித்து ஒரு துணியின் மேல் மற்றொன்று வைப்பதற்கு பதிலாக ஹேங்கரில் தொங்க விட்டு உபயோகமாக பயன்படுத்தலாம்.