சமையல் குறிப்புகள்

சத்து நிறைந்த பட்டாணி கேரட் அடை

தேவையான பொருட்கள் :

  • பட்டாணி – கால் கிலோ,
  • கேரட் – 100 கிராம்,
  • வெங்காயம் – 1,
  • பச்சை மிளகாய் – 2,
  • கொத்தமல்லி – அரை கட்டு,
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு.




செய்முறை:

  • கொத்தமல்லி, கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பட்டாணியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைத்துக் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்த கொள்ளவும்.
  • அரைத்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  • சூப்பரான சத்தான பட்டாணி கேரட் அடை ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker