சமையல் குறிப்புகள்
சத்து நிறைந்த பட்டாணி கேரட் அடை
தேவையான பொருட்கள் :
- பட்டாணி – கால் கிலோ,
- கேரட் – 100 கிராம்,
- வெங்காயம் – 1,
- பச்சை மிளகாய் – 2,
- கொத்தமல்லி – அரை கட்டு,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- கொத்தமல்லி, கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பட்டாணியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைத்துக் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்த கொள்ளவும்.
- அரைத்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- சூப்பரான சத்தான பட்டாணி கேரட் அடை ரெடி.